டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கும் மொபைல்வழிப் பணப் பரிவர்த்தனையில் எண்ணற்ற நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன. அதில் ஒன்றான பிரபல போன்பே நிறுவனம் மொபைல் வழிப் பணப் பரிவர்த்தனையை பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு சில குறிப்புகளை வழங்கியுள்ளது.
UPI வேண்டுகோள்களை கவனமாகக் கையாளுங்கள்
உங்களுடைய UPI ID-க்கு பணம்கேட்டு வேண்டுகோள்கள் அனுப்பப்க பட்டால் அவற்றை ஒருமுறைக்கு இருமுறைசரிபார்க்கவும். உங்களுக்கு அறிமுகமில்லாத அல்லது பயன்படுத்தாத எண் அல்லது பெயர்களாக இருந்தால் அவற்றை பின் தள்ளி விடவும் (Decline).
போலி வாடிக்கையாளர் சேவை எண்கள்
பணப் பரிவர்த்தனை குறித்து புகார் அளிக்க அந்தந்த ஆப்களிலேயே சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நேரடியாக புகார் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் கூகுள் தேடல் தளங்கள் மற்றும்ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் கிடைக்கும் எண்களை நம்பித் தொடர்பு கொள்ளவேண்டாம். அந்த எண்களில் பதில் அளிக்கும் நபர்களை நம்பிஉங்கள் கணக்கு விபரங்களைக் கொடுத்து ஏமாறவேண்டாம்.
மொபைல் திரையை பகிரும் ஆப்களை டவுன்லோட் செய்யாதீர்
எவரேனும் உங்களுக்கு உதவுகிறோம் என்று கூறி உங்கள் மொபைலில் ஸ்கிரீன்ஷேர், டீம்வியூவர், எனிடெஸ்க் போன்றஆப்களை டவுன்லோட் செய்யும்படிக் கூறினால் அவற்றை பதிவிறக்கவேண்டாம். உங்கள் மொபைல் திரையை மற்றவருடன் பகிர்ந்துகொள்ள உதவும் இந்த ஆப் பள் மூலம் வேறொரு இடத்திலிருந்து, அவர்களது மொபைல் அல்லது கணினி மூலமாக உங்கள் மொபைலில் நுழைந்து உங்கள் செயல்பாடுகளை கண்காணிப்பதும், உங்கள் வங்கி மற்றும் வாலட் ஆப்களில் மோசடி செய்வதும், ஓடிபி எண்களைப் பெறுவதும் சாத்தியம் என்பதால் இந்த ஆப்களைப் பயன்படுத்தவேண்டாம். பழுது நீக்குதல், பயன்படுத்த தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது போன்ற பணிகளுக்காக பயன்படுத்தப் படும் இந்த ஆப்களின் யூசர் ஐடி மற்றும்பாஸ்வேர்டை தெரிந்து பெற்றுக் கொண்டவர்கள் எவரும் எந்த நேரத்திலும் மொபைலில் நுழைய முடியும் என்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே அனைவரும் இவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்றும், வேலை முடிந்ததும் அவற்றை நீக்கிவிடுவதும் நல்லது என்று எச்சரிக்கப்படுகின்றனர்,
வங்கி அட்டை விபரங்களைப் பகிராதீர்கள்
உங்களுடைய வங்கி அட்டையின் எண்(Card Number), காலாவதி தேதி (ExpiryDate), கடவுச்சொல் (PIN), தற்காலிக கடவுச்சொல் (OTP) இவற்றை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். பிறருடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம். வங்கி அல்லது வாலட் சேவைநிறுவனப் பிரதிநிதி என்று கூறி எவரும்தொடர்பு கொண்டு கேட்டாலோ மின்னஞ்சல்மூலமாக கேட்டாலோ எந்த விபரத்தையும் கொடுக்கவேண்டாம். மின்னஞ்சல் மூலமாக இதுபோன்ற விபரங்களை எந்த நிறுவனமும் கேட்பதில்லை.வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள், பணம் செலுத்தக் கேட்டோ, அல்லது அனுப்புகிறோம் என்றோ வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கும் முன் அவற்றின் முகவரியை சரிபார்க்கவும். உதாரணமாக போன்பே நிறுவனமாக இருந்தால் @phonepe.com என்ற டொமைன் முகவரியுடன்தான் உங்களுக்கு எந்தவொரு தகவலும் அனுப்பப்படும்என்பதை கவனத்தில் கொள்ளவும். இதுமற்ற வங்கி மற்றும் சேவை நிறுவனங் களுக்கும் பொருந்தும்.இந்தப் பண்டிகைக் காலத்தையொட்டி வந்த பல மின்னஞ்சல்களில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணையவழி பொருள் விற்பனை நிறுவனங்களின் மின்னஞ்சல் விளம்பரங்களைப் பிரதியெடுத்து வேறுபோலி இணைய முகவரி மூலம் பலருக்கும்அனுப்பப்பட்டன. அவற்றை கிளிக் செய்துபார்ப்பவர்களுக்கு வேறு இணையதளங் கள் காட்டப்பட்டன. இதுபோன்று விளம்பரங்களாக வரும்அறிவிப்புகளையும் சரியான முகவரிதானா என்று பார்ப்பதும், அந்த இணையதள முகவரிகள் https:// என்ற பாதுகாப்பு அம்சத்தோடு உள்ளவையா என்பதையும் பார்த்துவிட்டு அவற்றில் எந்த ஒரு தகவலையும் உள்ளிடவும்.
===என்.ராஜேந்திரன்===